Friday, September 11, 2020

62 வயதில் 7 முட்டைகள் இட்ட மலைப்பாம்பு.. குழப்பத்தில் ஆடிப்போன வல்லுநர்கள்.. ஏன் தெரியுமா?

 

அமெரிக்காவில், செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள சுமார் 62 வயதான ஒரு மலைப்பாம்பு ஒன்று, சமீபத்தில் சுமார் 7 முட்டைகள் போட்டு குட்டிகளை ஈன்ற சம்பவம் மிருகக்காட்சி சாலையையே குழப்பத்தில் ஆழ்த்தியது.

காரணம் என்னவென்றால் அந்த மலைப்பாம்பு கடந்த சுமார் 20 ஆண்டுகள் ஆண் மலைப்பாம்பின் பக்கம் கூட போகவில்லை என அந்த மிருகக்காட்சி சாலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி, இவ்வகை பந்து மலைப்பாம்புகள் வழக்கமாக 60 வயதை எட்டுவதற்கு முன்பே முட்டையிடுவதை நிறுத்துவிடும் என மிருகக்காட்சி சாலையில் உள்ள வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT : Foldable Tripod Stand Mobile Clip and Camera Holder

Purchase this product here 👉👉👉 https://amzn.to/3iq6Vzq PROSmart Aluminium Adjustable Portable and Foldable Tripod Stand Mobile Clip and Camera Holder with Bagby Prosmart Concepts                                           

இதுகுறித்து மிருகக்காட்சிசாலையின் மேலாளர் மார்க் வன்னர் கூறும் போது, சிலவகை மலைப் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் போது ஒரு நேரங்களில் விந்தணுக்களை சேமித்து வைக்கும் திறன் பெற்றது. இருந்தாலும் இந்த மலைப்பாம்புக்கு அந்தவகை திறன்கள் இல்லை.இதில் உள்ள மற்றொரு அசாதாரணமான விஷயம் என்னவென்றால், முட்டையிட்ட இந்த பாம்பு, மிக வயதான நிலையில் முட்டையிட்ட பாம்பு என வரலாற்றில் பதிவு செய்யப்படும்.மேலும், அமெரிக்காவில் இருக்கும் பாம்புகளில் இந்த பாம்புதான் மிகவும் வயதான பாம்பு என மிருகக்காட்சி சாலையின் மேலாளர் மார்க் வன்னர் கூறியுள்ளார்.இது கருத்தரித்த 7 முட்டைகளில், 3 முட்டைகள் இன்குபேட்டரில் உள்ளதாகவும், 2 முட்டைகள் மரபணு மாதிரிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாவும், மற்ற 2 முட்டைகளில் பாம்புகள் உயிருடன் இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS