Friday, September 11, 2020

வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அடடா... இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

 


ஆயுர்வேதம் கூற்றுப்படி நெய் ஆரோக்கியமான நன்மைகளை தரக்கூடிய மூலப்பொருளாகும்.எனவே வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது உங்களுக்கு புத்துணர்ச்சியையும் அதே நேரத்தில் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.நெய் ஒரு இயற்கையான மாய்ஸ்ரைசர் ஆகும். இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது உங்க குடலை சுத்தப்படுத்துகிறது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு சுருக்கங்கள் மற்றும் பருக்களின் தோற்றத்தையும் குறைக்கும்.ஒரு டீ ஸ்பூன் நெய்யை சாப்பிட்ட பிறகு கொஞ்சம் வெந்நீர் குடித்துக் கொள்ளுங்கள்.

இந்த அற்புதமான நெய்யை தினமும் எடுத்துக் கொள்வது தமனிகள் போன்ற இரத்த குழாய்கள் தடினமாகுவதை தடுக்கும்.இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

இது உங்க உடல் உயிரணுக்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைக் குறைக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.மூட்டுகளில் மசகு எண்ணெய் உருவாவதை ஊக்குவிக்கிறது மற்றும் கால்சியம் உறிஞ்சுதலையும் அதிகரிக்கிறது. நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற மூட்டு வலி பிரச்சினையை தடுக்கிறது. நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது.

ADVERTISEMENT : FEGSY Resistance Loop Exercise Bands for Squats,Legs, Butt, Glutes and Heavy Workouts Physical Therapy, Rehab, Stretching, Home Fitness

FEGSY Resistance Loop Exercise Bands for Squats, Hips, Legs, Butt, Glutes and Heavy Workouts Physical Therapy, Rehab, Stretching, Home Fitness (Set of 5)
by FEGSY

உங்கள் மூளை செல்கள் சரியாக செயல்பட மற்றும் மீண்டும் உருவாக ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை.நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைய உள்ளன. இது புரதங்களையும் கொண்டுள்ளது, இது நரம்பியக் கடத்திகளின் மீளுருவாக்கத்தை தூண்டுகிறது.இது நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது உங்க தலைமுடியை பளபளப்பாக்க உதவும்.

இது மயிர்க்கால்களை தூண்டுகிறது. வேர்களை வலிமையாக்குகிறது. பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.



SOURCE : MANITHAN

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS