அஜித் ரசிகர்கள் எப்படி விவேகம் படத்திற்காக ஆவலாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு விஜய் ரசிகர்கள் மெர்சலுக்காக வெயிட்டிங்.
அட்லீ இயக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். வரும் ஆகஸ்ட் 20ம் தேதி இப்பட பாடல்கள் வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ள நிலையில் இதுவரை ரூ. 130 கோடி வரை செலவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இது படத்துக்காக போடப்பட்டுள்ள பட்ஜெட்டை விட அதிகமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் நடக்க இருக்கும் படப்பிடிப்பையும் சேர்த்து ரூ. 150 கோடிக்கு வந்துவிடும் என கணிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment