பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியாவை பரிந்துரை செய்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப் பிரபலம் ஆகியுள்ளார் நடிகை ஓவியா. படங்களில் நடித்தபோது கூட அவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிவில்லை. ஆனால் தற்போது தமிழக ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாகிவிட்டார் ஓவியா.
ஓவியாவுக்காக ஆன்லைனில் ஆர்மி துவங்கியுள்ளனர் ரசிகர்கள். மேலும் அகில இந்திய ஓவியா பேரவை வேறு துவங்கியுள்ளனர். ஓவியாவுக்கு பெருகி வரும் ஆதரவு தமிழக அரசியல் தலைவர்களின் கவனத்தை கூட ஈர்த்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியாவை பரிந்துரைத்தது யார் என்று தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்த உடன் அந்த ரிவி சேனல்காரர்கள் பல பிரபலங்களுக்கு போன் செய்து பேசியுள்ளனர்.
நடிகர் கிருஷ்ணாவுக்கு போன் செய்த அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு யாரையாவது பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளனர். அவரும் ஓவியாவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.
ஓவியாவை பிக் பாஸுக்கு பரிந்துரை செய்தது கிருஷ்ணா என தெரிந்த பின்பு ரசிகர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர். எங்கள் தலைவியை பரிந்துரை செய்த தலைவர் கிருஷ்ணா வாழ்க் என்று சமூக வலைதளங்களில் வாழ்த்தியுள்ளனர்.
No comments:
Post a Comment