தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களுக்கு என்றும் பஞ்சம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
தமிழ் பிக் பாஸ் போட்டியில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபரை போட்டியிலிருந்து வெளியேற்ற தகுந்த காரணங்கள் கூறவேண்டும்.
அந்த நபர்களில் தங்களுக்கு பிடித்த நபருக்கு மக்கள் வாக்களித்து அவரை பிக் பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம்.
இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவி,யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருகின்றது. இந்த நிலையில் இறுதியாக ஒளிபரப்பான நிகழ்ச்சியால் சில ஓவியா ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.
திடிரென்று ஓவியாவுக்கு என்ன ஆனது, அவர் இப்படி கிடையாதே என்றும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில், ஓவியாவிடம், ஆரவ் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்கிறார், அதோடு வையாபுரி நான் உனக்காக நான் எங்கு வேண்டுமானாலும் பேசுவேன், உன் மேல் நியாயம் இருக்கு, தைரியமாக இரு, நீ கவலைப்படாதே என்று கூறுகிறார். இதனால் அதிர்ச்சியில் நடிகை ஓவியா பார்கிறார்.
இந்த புரொமோ ரசிகர்களுக்கு இன்று நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிய வாய்ப்பிருக்கிறது.
No comments:
Post a Comment