தாய்லாந்து நாட்டில் பெத்ச்புன் மாகாணத்தில் உள்ள கோயில் ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் கரடிக்கு அங்கு வருபவர்கள் உணவு கொடுப்பது வழக்கம்.
கரடி ஒரு கட்டடத்தினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கோயிலுக்கு தனது நண்பர்களுடன் வந்த இளைஞன் கயிற்றின் மூலம் உணவு கொடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால், உணவை கொடுக்காமல் சற்று விளையாடி கரடியை சீண்டியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கரடி மதில் வழியாக அந்த இளைஞனை உள்ளே இழுத்துப் போட்டு வேட்டையாடியது.
வெளியே நின்றவர்கள் அந்த இளைஞரை கரடியிடம் இருந்து காப்பாற்ற பல முயற்சிகளை செய்தனர். கரடி அந்த இளைஞனை கடித்து அது கூண்டிற்கு இழுந்து சென்றது.
பின் கோயில் அதிகாரிகள் கரடியை கம்பால் அடித்து விரட்டி அந்த இளைஞனை காப்பாற்றினர்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment