முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் அணியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஆகியோரும் ஒரே விமானத்தில் சென்றனர். முன்னதாக இவர்கள் மூவரும் சென்னை விமான நிலையத்தில் 10 நிமிடங்கள் சந்தித்து அரசியல் நிலவரம் பேசிக் கொண்டனர்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் பலரும் சால்வை மற்றும் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
பின் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் OPS உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறி அவரை நெருங்க முயற்சித்துள்ளார்.
இதனால் அவரை மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் தடுத்துள்ளனர். அப்போது திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு OPS-ஐ தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் OPS ஆதரவாளர்கள் அவரைத் தடுத்தனர்.
No comments:
Post a Comment