நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் நேற்று வெளியேறியதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இதுகுறித்து சிம்பு நேற்று வெளியிட்ட ஆடியோ ஒன்றில் கூறியதாவது: கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்திற்கு பதிவு செய்வது, பணம் பெற்று கொண்டு ஒருவரை வேண்டுமென்றே விமர்சிப்பது அல்லது புகழ்ந்து பதிவு செய்வது ஆகியவைகளை நான் நன்றாக அறிகிறேன்.
பொய்யான செய்திகளை மேலும் மேலும் பரப்புவதால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த உலகத்தில் அன்பு ஒன்றுதான் நிரந்தரமானது. அன்பை தவிர வேறு எதையும் மற்றவர்கள் மேல் செலுத்த வேண்டாம்.
எதிர்மறை எண்ணங்களை யார் செய்கின்றார்கள் என்று எனக்கு தெரியும். இதை மக்களும் விரைவில் தெரிந்து கொள்வார்கள். சிறு தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர்களின் படங்களை புரமோஷன் செய்ய எனது டுவிட்டரை பயன்படுத்திவந்தேன்.
இனிமேல் அந்த உதவியை செய்ய முடியாது என்பதற்காக வருந்துகிறேன்' என்று சிம்பு அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை கூறியுள்ளார். சமீபத்தில் ஓவியாவுடன் சிம்புவை இணைத்து வேண்டுமென்றே கதை கட்டப்பட்டதால்தான் அவர மனம் நொந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment