பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல் பரபரப்பாக இல்லை. இதற்கு முக்கிய காரணம் எல்லோருக்கும் தெரியும் ஓவியா இல்லை என்பது தான்.
இதற்காக பல நட்சத்திரங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துக்கொண்டே இருக்கின்றனர், இந்நிலையில் கமல் நேற்று போட்டியாளர்களிடம் கோபப்பட்டு இனி நான் பேச மாட்டேன் என கூறினார்.
இதை தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் மன்னிப்பு கேட்டனர், ஆனால், இந்த நிகழ்வு அப்படியே ஹிந்தி பிக்பாஸிலும் நடந்துள்ளது.
சல்மான் கான் இப்படி கோபப்பட்டு வெளியேறியுள்ளார், ஆனால், கமல் இது ஸ்கிரீப்ட் இல்லை என அடித்து கூறுகின்றார்.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நடப்பதை எல்லாம் கவனித்தால் அப்படியே ஹிந்தி பிக்பாஸில் நடந்ததை நகல் எடுத்தது போல் தான் உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து டுவிட்டரில் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment