பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடித்துள்ள புரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தினமும் ஏதாவது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஜூலியை நெட்டிசன்கள் லூசு லூசு என்று திட்டுவது பிக் பாஸ் காதுகளை எட்டிவிட்டது போல. இன்றைய டாஸ்கில் ஜூலி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர் போன்று நடிக்கிறார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று நடித்தாலும் சினேகன் பெண்களை தொடுவதை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. ஜூலியோ போராளி போன்று போராட்டம் நடத்துகிறார்.
ரைசாவை சும்மாவே அனைவரும் மேக்கப் பைத்தியம் என்கிறார்கள். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டது போன்று நடிக்கும்போது கூட லிப்ஸ்டிக்கும் கையுமாக உள்ளார்.
நான் மாஸ்டர்ல யாருக்கும் அடங்கக் கூடாது அனைவரையும் அடக்குவேன் என்று காயத்ரி பேசுகிறார். கடந்த சில நாட்களாக நல்லவர் வேஷம் போட்டவர் தற்போது மீண்டும் தனது குணத்தை காட்டுகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் என்ன கருமம்டா இது, இது ஒன்னு தான் குறையாக இருந்தது இப்போ அதுவும் ஓகே என்று கமெண்ட் அடித்துள்ளனர்.
No comments:
Post a Comment