பிக்பாஸூக்கும் ஓவியாக்கும் போட்டி வைத்து வாக்குப்பதிவு நடந்தால் கூட ஓவியா மிக எளிதாக பிக்பாஸை வென்றுவிடும் சூழல்தான் தற்போது உள்ளது.
இதனால் தான் ஓவியாவின் பெயரை வேண்டுமென்றே டேமேஜ் ஆக்கும் வகையில் பிக்பாஸ் நடந்து கொண்டாலும் ஓவியாவின் புகழ் சிறிது கூட குறையவே இல்லை
இந்த நிலையில் நேற்றும் இன்றும் ஓவியாவை அழுகாச்சியாகவே காட்டிக்கொண்டும், இருட்டடிப்பும் செய்து கொண்டிருந்த அந்த தொலைக்காட்சி, பயங்கர எதிர்ப்பு காரணமாக இன்று ஓவியாவின் 'மகிழ்ச்சி'யை ப்ரமோவாக காட்டியுள்ளது.
இன்று வெளியான ப்ரமோ வீடியோவில், ஜூலியை இனிமேல் எதையும் மறக்காதே என்று கலாய்ப்பதும், ரைசாவிடம் நக்கலாக பேசுவதும், ஆரவ்வை நோக்கி 'மகிழ்ச்சி' என்று கூறுவதும் செம கெத்து என்று கமெண்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment