ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த படம் மீசைய முறுக்கு. இப்படத்தை சுந்தர்.சி தயாரித்து இருந்தார். முழுக்க, முழுக்க இளைஞர்களே இந்த படத்தை உருவாக்கினர்.
இப்படம் தமிழகத்தில் 4 கோடி வரை வியாபாரம் ஆனது, பலரும் எப்படி போட்ட பணத்தை எடுக்கும் என சந்தேகத்துடன் இருந்தனர்.
ஆனால், படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து எல்லோருக்கும் லாபத்தை கொடுத்துள்ளது.
ஹிப்ஹாப் ஆதி தற்போது தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment