பெப்சி உமாவை அவ்வவளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. சின்னத்திரையில் முதல் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தவர். பெப்சி உங்கள் சாய் நிகழ்ச்சியில் இவரை பார்ப்பதற்காகவே ஒரு தனி கூட்டம் இருக்கும் மேலும் இவரிடம் ஒரு முறையாவது பேச மாட்டோமா என ஏங்கியவர்கள் ஏராளம்.
அவ்வவளவு ஏன் பெரிய சினிமா நடிகர்கள் கூட இவரிடம் பேச காத்திருந்தனர். அப்படிப்பட்டவர் புகழின் உச்சியில் இருந்தபோத திருமணம் செய்து கொண்டு, சின்னத் திரையில் இருந்து ஒதுங்கினார். பல சினிமா பட வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்க மறுத்து விட்டார்.
தற்போது ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் தமிழ்நாடு பொறுப்பாளராக உள்ளார். இதற்கிடையில் சில மாதங்கள் ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அங்கு பிரச்னையாகி போலீஸ் புகார் வரை சென்றது. அதன்பிறகு சன் மற்றும் கலைஞர் டிவியில் அழைத்தபோது மறுத்து வாய்ப்பை மறுத்து விட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவரை பத்திரிகையாளர்கள் சந்தித்தபோது, என்னால் ஒரே மாதிரியான நிகழ்ச்சியை செய்ய முடியாது. வித்தியாசமான நிகழ்ச்சிகள் என்றால் செய்ய தயராக உள்ளேன். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வருவேன் என்று கூறி உள்ளார்.
இதனை கேட்ட டிவியினர் விடுவார்களா என்ன. அவருக்காக நிகழ்ச்சியை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக விரைவில் அவரை மீண்டும் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment