பிறந்த ஊருல பிறந்த மேனியா திரிஞ்சா என்ன தப்புன்னு வடிவேலு ஒரு படத்தில் கொமடியாக கூறியிருப்பார். ஆனால், நம்ம ஊரில் நிர்வாணமாக ஒருவர் சுற்றினால் பொலிஸ் கைது செய்து லாடம் கட்டிவிடும். ஏனெனில், இது சட்டத்திற்கு புறம்பானது.
ஆனால், உலகின் சில நாடுகளில் மக்கள் பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது சட்டப்பூர்வமாக லீகல் செய்யப்பட்டுள்ளது, சாலைகள், பார்க், பீச், காடுகள் என எங்கே வேண்டுமானலும் ஃப்ரீயாக சுற்றலாம். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளும் இருக்கின்றன. இதோ! முற்றிலும் நிர்வாணமாக உலாவ அனுமதி வழங்கியுள்ள நாடுகள்...
பிரான்ஸ்!
பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் நிர்வாணமாக செல்ல எந்த தடையும் இல்லை. ஆனால், பொது இடங்களில் உடலுறவில் ஈடுபடுவதற்கு தடை.
இங்கே கேப் டி'எஜ்டு என்ற பகுதி இந்த விஷயத்திற்கு உலகின் சிறந்த பகுதியாக திகழ்கிறது. இங்கே வருடாவருடம் நூற்றுக்கணக்கான மக்கள் இதற்காகவே கூடுகின்றனர்.
குரோசியா!
இயற்கை வளம் பேணிக் காக்கும் இந்த நாட்டில், மக்கள் பொது இடங்களில் நிர்வாணமாக தடை இல்லை. இங்கே இதற்கான எந்த சட்டமும், தண்டனையும் இல்லை.
நெதர்லாந்து!
நெதர்லாந்து சாலைகளில் நிர்வாணமாக செல்லலாம். சில இடங்கள் இதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கே செக்ஸ் கல்வி, விபச்சாரம், டாப்லெஸ் பீச்சுகள் என பல விஷயங்கள் இருக்கின்றன.
ப்ளோரிடா!
மியாமி, ப்ளோரிடாவில் இருக்கும் ஹவுல்ஓவர் எனும் பீச் நிர்வாணமாக நேரம் கழிக்க பிரபலமான இடமாக திகழ்ந்து வருகிறது. இங்கே இயற்கையின் அழகு மிதமிஞ்சி இருப்பது சிறப்பாகும்.
ஸ்பெயின்!
இந்த நாட்டில் நிர்வாணமாக இருப்பது அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. இங்கே சாலை, காடுகள், பார்க், பீச் என எங்கே வேண்டுமானாலும் நிர்வாணமாக இருக்கலாம்.
ஜெர்மனி!
ஒருசில இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஜெர்மனி நிர்வாணமாக இருக்க லீகல் சட்டம் இருக்கிறது. முனிச் நகரில் முற்றிலும் லீகல் செய்யப்பட்டுள்ளது. அட்லாண்டிக் நகர்களில் அர்பன் நிர்வாண பகுதிகள் என ஆறு இடங்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment