பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே ஒரு பெரும் அதிர்வலையயை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் ஓவியா மற்றும் ஜூலி. இவர்கள் இருவருமே இப்போது வெளியேறி விட்டனர்.
ஓவியா தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். ஓவியாவுக்காக ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை தொடங்கும் அளவுக்கு அவரது புகழ் உயர்ந்து விட்டது.
அதே போல ஜூலி எதிர்மறையாக மக்களின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதித்து இருந்தார். ஓவியாவை ரசித்து ரசித்து பார்த்தாலும், ஜூலியும் என்னதான் செய்ய போகிறார் என்று பார்த்து வந்தனர்.
தற்போது இருவருமே இல்லாததால் நிகழ்ச்சி டல்லடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் பிரபல ரிவியின் டிஆர்பி ரேட்டிங் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
எனவே இதனை சரிகட்ட என்ன செய்வது, யாரை அழைத்து வருவது என மூளையை கசக்கி வருகிறது. ஜெயம்ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர் மறுத்து விட்டார்.
அதே போல கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிடம் பேசி உள்ளனர். அவர் வருவதற்கு ஒப்பு கொண்டார் என கூறப்படுகிறது.
மேலும் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரசியத்தை கூட்ட வேறு யாரை அழைக்கலாம் என யோசித்தபோது பிரபல ரிவிக்கு டிடி நினைவு வந்தது. எனவே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர் ஒப்புக்கொண்டாலும் பத்து நாட்களுக்கு வரை எல்லாம் என்னால் தங்க முடியாது என்று கூறி விட்டார்.
மேலும் கெஸ்டாக ஒரு மணி நேரம் மட்டுமே வர ஒப்பு கொண்டுள்ளார். எனவே டிடி பிக்பாசில் கெஸ்டாக வந்து கலக்க போகிறார். ரசிகர்களுக்கு நல்ல விருந்துதான்.
No comments:
Post a Comment