பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பெரும் வைரலாகச் சென்று கொண்டிருக்கும் விடயம் ஓவியா மற்றுய்ம் ஆரவ்விற்குமிடையே உள்ள காதல் பிரச்சனை தான்.
இது குறித்த முடிவு இன்று தான் தெரிய வந்துள்ளது.
இன்றைய நிகழ்ச்சியில், ஆரவ்விடம், ஓவியா தனியாக பேச வேண்டும் என்று அழைத்துக் கொண்டே இருந்தார். ஆனால், ஆரவ் அதனை மறுத்துக் கொண்டே வந்த நிலையில், இறுதியாக சம்மதம் தெரிவித்து பேசுவதற்காக இருவரும் கார்டன் பக்கம் வந்தனர்.
அப்பொழுது, ’ஓவியா நீ இல்லாம என்னால இருக்க முடியாது’ என்று கூறினார். மேலும், நீ பழகிட்டு உடனே விட்டுட்டு போக நான் ஒன்னும் முட்டாள் இல்ல எனக் கூறினார்.
பின்பு, நான் உனக்கு குடுத்த முத்ததை வாங்கிக் கொண்டு இப்போ ஏமாத்துறியா? எனக் கேட்டார். அப்பொழுதும் ஆரவ் அதனை மறுத்து போக முயன்றார்.
இதனால், ஆத்திரமுற்ற ஓவியா ’கெட் லாஸ்ட்’ எனக் கூறிவிட்டு வெளியே இருந்த சோபாவில் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டார்.
அப்பொழுது, பிந்து ஓவியாவை சமாதானப் படுத்த முயன்றார். ஆனால், ஓவியா பிந்துவை தயவு செய்து என்னை 5 நிமிடம் தனியாக விடுங்கள் எனக் கூறி அனுப்பிவிட்டார்.
No comments:
Post a Comment