நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒருவர். வந்த சில நாட்களிலேயே மக்கள் மனதை வென்ற ஒருவராக மாறிவிட்டார்.
சமீபத்தில் இவர் சக போட்டியாளாராக இருந்த ஆரவை காதலித்து வந்தார். ஆனால் அவர் இதை ஏற்றுக்கொள்ளாதால் ஓவியா மன விரக்திக்கு ஆளானார்.
இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்டது. இதனால் ஓவியா மருத்துவ சிகிச்சைக்காக வெளியே அனுப்பப்பட்டார். இந்நிலையில் இதை விசாரிக்க பாலாஜி என்ற சட்டபொறியாளர் சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
சில நாட்களாக இது குறித்து எந்த தகவலும் இல்லாதால் அவர் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் இதுவரை ஓவியாவிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை.
ஆனால் ஓவியா நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் விசாரணை நடத்தப்படும் என கூறியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment