பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருக்கும் போட்டியாளர்களில் காயத்திரி ரகுராமும் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே இவரின் அடாவடியான பேச்சு, மிரட்டும் வகையில் நடந்துகொண்டது என முக சுளிப்பை உண்டாக்கினார்.
அதிலும் ஓவியா விசயத்தில் இவர் நடந்து கொண்டது ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. சமூக வலைதளங்களில் வெகுவாக எதிர்ப்புகள் கிளம்பின. கமலும் வார இறுதி நாட்களில் சூட்சமமாக சொல்லி காண்பித்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களின் தரப்பு கேள்விகளுக்கு காயத்திரியும் நான் அப்படியில்லை, இப்படியில்லை என பதிலளித்தார். இந்நிலையில் இந்த வாரம் காயத்திரி தான் வெளியேறப்போகிறார் என்ற வதந்திகள் பரவியது.
ஏற்கனவே ரைசா, காயத்திரி இருவரும் நாமினேஷன் ஆகியிருகிறார்கள். இந்நிலையில் அவர் ட்விட்டர் பக்கத்தில் எவிக்ஷன் புரமோவை ரீட்வீட் செய்தார். உள்ளிருப்பவர்களுக்கு வெளியுலகத்துடன் தொடர்பு இல்லை என்ற கண்டிசன் இருந்தபோதிலும், அவரின் ட்வீட் இதனால் காயத்திரி தான் எலிமினேட் ஆகிவிட்டாரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.
வந்த காயத்திரியை ரசிகர்கள் விடாமல் விமர்சிக்க தொடங்கினார்கள். உடனே 10 நிமிடத்தில் அவர் அதை பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். நிகழ்ச்சி குறித்து பேட்டியோ, செய்திகளோ கொடுக்கக்கூடாது என்ற ஒப்பந்தத்தை அவர் மீறிவிட்டாரோ என பேச தொடங்கிவிட்டார்கள்.
நமீதா, சக்தி, ஜூலி, ஓவியா என வெளியேறிவர்கள் யாரும் இப்படி செய்யாத நிலையில் காயத்திரி இப்படி நடந்துகொண்டது அவர் வெளியேறியது உண்மை தான் என தோன்றுகிறது.
No comments:
Post a Comment