Sunday, August 27, 2017

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - நாளை குறும்படம் !


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் வினோதமான ஒரு விளையாட்டை தொடக்கி வைத்தார். வீட்டில் ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி தங்களுக்குள் மற்றவர்களை பற்றி இருக்கும் புகாரை எடுத்து சொல்லி வக்கீலாக கேள்வி எழுப்பலாம்.
அந்த வகையில் சினேகனுக்கும் ஆராவுக்கும் நீதிமன்றத்தில் யார் பின்னாடி பேசுகிறார்கள் என்ற பிரச்சனைக்கு சிறு வாக்குவாதம் நடைபற்றது. அதன் பின் குற்றவாளியாக ஆர்வ நிற்க ஹரிஷ் சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக ஒவ்வொருத்தரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சில விஷயங்கள் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
அச்சமயத்தில் அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாலும் நாளை வரும் ப்ரோமோவில் ஆரவ் யாரோ ஒருவரிடம் பிரச்சனை செய்து கொண்டிருப்பது போல் இருந்தார். அதன் பின் கமல் மீண்டும் ஆராவை பற்றி ஒரு குறும் படம் இருக்கிறது என்று கூற நாளை வரும் எபிசொட் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS