பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்த நடிகை ஓவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட நடிகை ஓவியா நேற்றைய எபிசோடில் திடீரென நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றில் இன்று வெளியாகி இருக்கும் செய்தியில் நடிகை ஓவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment