பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் ரசிகர்கள் அதிகம் வெறுப்பது காயத்ரியைதான். அவர் அதிகம் கெட்ட வார்த்தை பேசுவதாக கமல் கூட பல முறை கண்டித்தார். ஆனால் அவர் இன்னும் மாறியபாடில்லை.
இந்நிலையில் ரசிகர்கள் ட்விட்டரில் கேட்ட கேள்விகள் இன்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது.
"எப்போ பாத்தாலும் செஞ்சிடுவேன், கை கால் உடைச்சிடுவேன் என்று சொல்றீங்க. நீங்க டான்ஸ் மாஸ்டரா இல்ல ரவுடியா?" என ரசிகர் ஒருவர் கேட்டார்.
அப்போது பதிலளித்த காயத்ரி 'நான் தமிழ் சினிமாவில் வரும் மாஸ் படங்களை பார்த்து வளர்ந்தேன். அதை பார்த்து தான் இப்படி ஒரு ஸ்லாங் கத்துக்கிட்டேன். அது எனக்கு ரொம்ப பிடிக்கும்" என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment