பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியே அனுப்புமாறு ஓவியா கேட்டுள்ளாராம். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஓவியாவுக்கு தான் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது. ஓவியா ஆர்மி, அகில இந்திய ஓவியா பேரவை துவங்கும் அளவுக்கு சென்றுவிட்டனர் ரசிகர்கள்.
இந்நிலையில் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஓவியா. ஓவியாவுக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போக வேண்டுமாம். உடல்நலம் சரியில்லை என்னை வெளியே அனுப்புங்கள் என்று அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறாராம்.
ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அடம்பிடிப்பதால் அவரை அனுப்ப முடிவு செய்துள்ளார்களாம். இந்நிலையில் தான் பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த வாரம் ஓவியாவை வெளியே அனுப்ப போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். அதை பார்த்த ரசிகர்களோ ஓவியா சென்றுவிட்டால் நாங்கள் பிக் பாஸை பார்க்க மாட்டோம் என்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment