பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதம் 9 பேர் மட்டுமே உள்ளனர். எனவே இவர்களை வைத்து திட்டமிட்டபடி 100 நாட்கள் நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
எனவே பிக்பாஸ் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என அறிவித்தது. மேலும் புதிய வரவாக பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
குறிப்பாக ஓவியா, காயத்ரி ஆகியோர் கட்டி அணைத்து வரவேற்றனர். மற்றவர்கள் குலுக்கி வரவேற்றனர். அதே நேரம் நமது கட்டிப்புடி நாயகன் சினேகனும் பிந்து மாதவியை கட்டி பிடிக்க நினைத்து அருகில் வந்துள்ளார். ஆனால் பிந்து மாதவி அவரை கண்டு கொள்ளவில்லை.
இதனால் கையை மட்டும் குலுக்கினார். பிந்து மாதவியை கட்டி பிடிக்க முடியாததால் சினேகன் பெரும் ஏமாற்றம் அடைந்தார். இனி வரும் நாட்களில் சினேகனிடம் பிந்து மாதவி எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.
No comments:
Post a Comment