Sunday, July 30, 2017

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை அடக்க வந்துள்ள கழுகு நாயகி!

பிக்பாஸ் குடும்பத்தில் புதுசா இன்னொரு போட்டியாளர்கள் அடியெடுத்து வைத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஏதோ புதுசு புதுசு நடந்து வருகிறது. முதலில் 14 போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறப்பட்டது. ஆனால், இறுதியில் நமீதா 15வது போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட 36 நாட்கள் கடந்த நிலையில், 6 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். மீதமுள்ள 9 போட்டியாளர்களுக்கு இடையில் ஏகப்பட்ட பஞ்சாயத்து. இதனை தீர்த்து வைக்க வாரத்திற்கு இருமுறை பஞ்சாயத்து தலைவராக கமல்ஹாசன் வந்து செல்கிறார்.
அப்படியிருக்கும் போது புதுசா இன்னொரு போட்டியாளரை பிக்பாஸ் குடும்பம் அறிமுகப்படுத்தவுள்ளது என்று நேற்றைய புரோமோவில் கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த போட்டியாளர் யார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கழுகு படத்தின் நாயகியான பிந்துமாதவி பல்லக்கில் வந்து இறங்கியுள்ளார்.
இனிமேல், தான் பிக்பாஸ் வீடில் பல சுவாரஷ்யமான நிகழ்ச்சிகள் நடக்குமாம். பார்க்கலாம் அப்படி என்ன சுவாரஷ்ய நிகழ்ச்சிகள் நிகழ இருக்கிறது என்று.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS