Sunday, July 23, 2017

வாரத்திற்கு 6 முட்டை... உடலில் அற்புத மாற்றத்தை உணர்வீங்க



பலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான். ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முட்டையை தினமும் எடுத்துக் கொள்வது மூலம் உடலுக்கு பல ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கிறது. தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் உண்டு.
இதில் விட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான விட்டமின்களும் உள்ளன. தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் வாயிலாக குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ்(Antioxidants), கண்பார்வையை தெளிவாக்கும். இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்புக்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.
வாரத்துக்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
45 வயதை தாண்டியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்டு விட்டு, மஞ்சள் கருவை தவிர்த்து விடுவது நல்லது.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS