Saturday, August 12, 2017

இறுதி சடங்கின் போது உயிர் பெற்ற குழந்தை... நொடிப்பொழுதில் நிகழ்ந்த அதிசயம்


ராஜஸ்தானின் புண்டியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலி அதிகமானதன் காரணமாக, மகப்பேறு மருத்துவர் இல்லாமலேயே வெறும் செவிலியர்களின் உதவியுடன் குறைப்பிரசவத்தில் குழந்தைப் பிறந்தது.
இந்த குழந்தை கருவுற்று 22-24 வாரங்கள் தான் ஆகியிருக்கும். அதற்குள் அந்த குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறக்கும் போது, அதன் எடை 350-400 கிராம் தான் இருக்கும்.
பிரசவத்தின் போது குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர்கள் தெரிவித்துவிட்டனர். அதுவும் அவர்கள் குழந்தை பிறந்த பின், அதற்கு செய்ய வேண்டிய முறைய சோதனைகள் ஏதும் செய்யாமல், குழந்தை அசையவில்லை மற்றும் மூச்சு விடவும் இல்லை என்பதை மட்டும் பார்த்து, குழந்தை இறந்துவிட்டதாக முடிவெடுத்துவிட்டனர்.
செவிலியர்கள் குடும்ப உறுப்பினர்களிடம், குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லை, எனவே குழந்தை இறந்துவிட்டது, மேற்படி செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள் என்று கூறி இறந்த குழந்தையை ஒப்படைத்துவிட்டனர்.
இறந்துவிட்ட குழந்தைக்கு இறுதி சடங்கு நடத்துவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன், குடும்ப உறுப்பினர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் மூச்சுவிடுவதைப் பார்த்து, குழந்தை உயிருடன் தான் உள்ளது என்பதை அறிந்து கொண்டனர். ஒரு பக்கம் இச்சம்பவம் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் தவறாக கூறிய செவிலியர்களின் மீது அளவில்லாத கோபத்துடன் இருந்தனர்.
குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, நீதி வேண்டுமென்று போராடினர். பின் பொறுப்பின்றி நடந்து கொண்ட செவிலியர்களின் செயலால், மருத்துவமனை மீது வழக்கு பதியப்பட்டது.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS