Monday, August 7, 2017

ஓவியாவுக்கு ஆரவ் மருத்துவ முத்தம் அளித்ததாக கூறியது வேதனை அளிக்கிறது


நடிகர் ஆரவ் அளித்த மருத்துவ முத்தம் மிகவும்
பிரபலமடைந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இந்த மருத்துவ முத்தம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பரணி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கமலின் விசாரணையின் போது முதலில் ஓவியாவுக்கு முத்தம் கொடுக்கவில்லை என கூறிய ஆரவ் பின்னர் தான் முத்தம் கொடுத்ததை ஒத்துக்கொண்டார். ஆனால் அது மருத்துவ ரீதியாக கொடுத்தது என கூறி சமாளித்தார்.
பல்வேறு வகையான முத்தங்களை பார்த்த கமல்ஹாசனுக்கே இந்த மருத்துவ முத்தம் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ஜூலி, பரணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்ற ஒரு புகைப்படம் பரவி வருகிறது. இது தொடர்பாக பரணி கூறிய கருத்தில் என் காலில் ஒரு பெண் விழுந்தது உண்மைதான், ஆனால் இது குறித்து நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்றார்.
மேலும் ஓவியாவுக்கு ஆரவ் மருத்துவ முத்தம் அளித்ததாக கூறியது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS