ஆரவ் மருத்துவ முத்தம் கொடுத்ததாக கூறுவதே ஸ்கிரிப்டு தான் என ஆரவ்வின் அண்ணன் நதீம் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஓவியா வெளியேறினார், ஆரவ் அவருடைய காதலை ஏற்றுக்கொள்ளததால் ஏற்பட்ட மன உளைச்சலே இதற்கு காரணம் என தெரியவருகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன், ஆரவ்விடம் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டார். அப்போது ஆரவ் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து ஆரவ்வின் அண்ணன் நதீம் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் ஏற்கெனவே சொன்னதுபோல், ஆரவ் மிகவும் கண்ணியமானவன். அவன் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் செய்ய மாட்டான்.
நிகழ்ச்சியில் நடப்பது எல்லாவற்றையும் ஸ்க்ரிப்டாகத்தான் எங்கள் குடும்பத்தார்கள் பார்க்கிறோம். ஏன் என்றால், 'பிக் பாஸ்' இந்தி, தெலுங்கு, தமிழ் என எல்லாவற்றையும் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
நம்ம எல்லோருக்கும் ஒவ்வொரு ஜாப் இருக்கும், அதில் முழுவதுமாக அர்ப்பணிப்போடு இருந்தால் தானே அதில் வெற்றி பெற முடியும்.
ஆரவ் பிக் பாஸில் செய்வது எல்லாவற்றையும் நாங்கள் அவனது ஜாப்பாகத்தான் பார்க்கிறோம். எல்லோரையும் நம்ம திருப்தி பண்ண முடியாது.
ஆரவ் மிகவும் போராடி சினிமாவுக்குள் சென்றிருக்கிறார். அவரது சினிமா கனவை இதனால் நிறுத்தி, நாளை 'உங்களால்தான் என் வாழ்க்கையில், நான் ஆசைப்பட்டதே செய்ய முடியவில்லை' என்று அவர் சொல்லக்கூடாது.
இன்று பேசுபவர்கள், நாளை ஆரவ் வெற்றி பெறும்போது, ஆரவ்வின் பக்கத்தில் நிற்கத்தான் ஆசைப்படுவார்கள். அதனால் எங்களுக்கு, ஆரவ்மீது கோபம் இல்லை. அவரை நிகழ்ச்சியில் நடிப்பதாகத்தான் பார்க்கிறோம்.
ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தது, வருத்தமளிக்கிறது. ஒரு படத்துக்கு எப்படி ஹீரோ, ஹீரோயின் தேவையோ அதே மாதிரிதான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா. அவர்கள் இருவரும்தான் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்'' என்கிறார்.
No comments:
Post a Comment