ஆடம்பரமான சொகுசு உணவகங்களைத்தான் நம்மில் பெரும்பாலானோர் அதிகம் விரும்புவோம். ஆனால், தாய்லாந்தில் சிறை செட்-அப்பில் சொகுசு உணவகத்தை அமைத்துள்ளனர். அதன் உள்ளே சென்று பார்த்தால் நமக்கு நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும்.
தாய்லாந்தில் அமைக்கப்பட்ட இந்த சிறை வடிவ உணவகத்தில் ஒருநாள் இரவு தங்க 2,500 ரூபாய் செலுத்த வேண்டும். என்ன கொடுமை இது! சிறைக்கு செல்ல பணம் கட்ட வேண்டுமாம்.
இந்த உணவகத்தில் உள்ள சிறப்பம்சமே எல்லாமே சிறைக்குள் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
இந்த உணவகத்தின் அறைகள் சிறை அறை போன்றே இரும்பு கம்பிகளால் ஆனது. உள்ளே சென்று கம்பி எண்ண வேண்டாம். நன்றாக சாப்பிடலாம். சிறையில் உள்ளது போன்ற அமைப்பில் உள்ளது. அங்கு செல்பவர்களுக்கு சிறைவாசிகளுக்குக் கொடுக்கப்படும் உடைகளும் கொடுக்கப்படுகிறது. உணவகத்தின் வாயிலும் சிறையின் வாயிலைப் போல் காட்சியளிக்கிறது.
ஆனால், சிறையில் அனுபவிப்பதுபோல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம். இலவச வை-ஃபை வசதி, சுவையான உணவுகளை இந்த உணவகத்தில் அனுபவிக்கலாம். ஒருமுறை நிச்சயம் போயிட்டு வாங்க.
No comments:
Post a Comment