பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள காயத்ரி ரகுராம் பற்றி நடிகை ஆர்த்தி சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகை ஆர்த்தி தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மக்களின் மனதை நடிகை ஓவியா வென்றுவிட்டதால் அவர் தான் பிக்பாஸ் வெற்றியாளர் என்று கூறியுள்ளார்.
மேலும், ஜூலியுடன் தனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் காயத்ரி ரகுராமுக்கு நான் ஜால்ரா அடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அப்படி கிடையாது அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவுடன் எனது அப்பாவும், கமல் சாரும் நெருங்கிய நண்பர்கள்.
சிறு வயதில் நான் கமல்சார் வீட்டில் தான் வளர்ந்தேன் என்று எங்களிடம் கூறினார்.
அவர் பரம்பரை ரீதியாக பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் செய்யும் தவறுகளை அவர் முகத்திற்கு எதிராக யாரும் சொல்லவில்லை.
அவருக்கு கோபம் வந்தால் அதிக கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவார், அதில் பாதி வார்த்தைகள் சென்சார் செய்யப்பட்டு மீதி வார்த்தைகள் தான் ஒளிபரப்பப்படுகின்றன.
அவருக்கும் பரணிக்கும் என்ன பிரச்சனை என்பது ரகசியமாக உள்ளது, எனக்கு தெரியாது, பரணியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் அவர் மிக குறிக்கோளாக இருந்தார், மேலும் ஓவியாவையும் அவர் வெறுத்தார் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment