உலகின் குண்டான ஆண்களில் ஒருவராக திகழும் நபர் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளதோடு அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
அமெரிக்காவின் Missouri மாகாணத்தை சேர்ந்தவர் Sean Mulroney (46), உலகின் குண்டான ஆண்களில் ஒருவராக திகழும் இவரின் உடல் எடை கடந்த ஏழு மாதத்துக்கு முன்னர் 317 கிலோ இருந்துள்ளது.
உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற சபதத்தோடு 7 மாதத்தில் 45 கிலோ வரையிலான எடையை Sean குறைத்துள்ளார்.
இளம் வயதிலிருந்தே அதிகமான துரித உணவுகள், கேஸ் கலந்த குளிர்பானங்கள் ஆகியவற்றை அதிகளவில் உட்கொண்டதால் Sean-ன் உடல் எடையானது அதிகரித்து கொண்டே சென்றுள்ளது.
இதோடு மது அருந்தும் பழக்கமும் அவருக்கு இருந்துள்ளது. இனியும் மது குடித்தால் நீரிழிவு மற்றும் இதய நோய் Sean-ஐ தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அந்த பழக்கங்களை அவர் விட்டுள்ளார்.
Sean கூறுகையில், சத்துக்களே இல்லாத உடல் எடையை அதிகரிக்கும் கலோரிகள் அடங்கிய துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவேன்.
இதனால் தான் எனக்கு பிரச்சனை ஏற்பட்டது. இது போன்ற கெட்ட உணவுகளை சாப்பிட கூடாது என பள்ளிக்கூடங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
7 மாதத்தில் 45 கிலோ எடை குறைந்தது தனது வாழ்க்கையையே மாற்றியுள்ளது எனவும் Sean தெரிவித்துள்ளார்
தற்போது வாரம் 3 நாட்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு Sean செல்கிறார், துரித உணவுகள் சாப்பிடுவதை விட்டு விட்டார்.
காய்கறிகள், முட்டை, சிக்கன் போன்ற உணவுகளை மட்டுமே சரியான டயட்டில் Sean சாப்பிடுகிறார். 100லிருந்து 110 கிலோவுக்குள் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருவதே இவரின் லட்சியமாகும்.
No comments:
Post a Comment