Sunday, August 13, 2017

பேஸ்புக் அடிமைகளை காதலிப்பவர்களுக்குள் எழும் பிரச்சனைகள்!


இன்று பேஸ் புக்கிற்கு அடிமையானவர்கள் என்று ஏராளமானோர் உள்ளனர்.. காலையில் எழுந்து பல்துலக்குவது முதல், இரவு தூங்க போகும் வரை நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஸ்டேட்டஸ் போட்டு விடுகிறார்கள். இதனை பார்க்கும் போது அவர்களது பேஸ்புக் நண்பர்களுக்கே கடுப்பாகும் என்றால் காதலிக்கு எப்படி கடுப்பாகும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். பேஸ்புக்கிற்கு அடிமையாக இருக்கும் காதலனை கொண்டுள்ள பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
பாதுகாப்பின்மை
தனது காதலனுக்கு பேஸ் புக்கில் நிறைய பெண் தோழிகள் இருந்தால் கண்டிப்பாக பெண்களுக்கு ஒரு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றும். அதுவும் தன்னை விட அழகான பெண்கள் தன் காதலனுக்கு இருந்தால் அவ்வளவு தான்…!
கண்டு கொள்வதில்லை!
என்னுடன் பேச நேரம் ஒதுக்குவதில்லை..! என்னுடன் இருக்கும், பேசும் நேரத்தை விட தனது நண்பர்களுடன் பேசும் நேரமும் அரட்டையடிக்கும் நேரமும் தான் அதிகம்! என்னை கண்டு கொள்வதே இல்லை என்பது போன்ற எண்ணங்கள் பெண்கள் மனதில் தோன்றும்.
தாமதம்!
சாட்டிங் செய்யும் போது மேசேஜ் தாமதமாக வந்தால், இந்த இடைப்பட்ட நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் தான் தோன்றும்! இதனால் எத்தனை அன்புள்ளவர்களாக இருந்தாலும் கூட அந்த சூழ்நிலையில் சற்று காதலும் அன்பும் குறையத்தான் செய்யும்.
ஆல் இந்தியா ரேடியோ!
காதலர்களுக்குள் நடக்கும் பர்சனல் விஷயங்கள், புகைப்படங்களை எல்லாம் கூட நண்பர்களிடம் இருந்து லைக் வாங்குவதற்காக பேஸ்புக்கில் போடும் போது, நமக்குள் எந்த ஒரு விஷயமும் பர்சனாலாக இல்லையா? என்ற எண்ணம் தோன்றும். உங்களிடையே உள்ள இடைவெளி குறையும்.
சண்டை சச்சரவு!
யாரெல்லாம் உங்களது புகைப்படங்களுக்கு லைக் போட்டு இருக்கிறார்கள் என்பதை பார்ப்பார்கள். ஏதாவது ஒரு பெண் மிக நெருக்கமானவர்களை போல கமெண்ட் செய்தால், யார் இது? அவள் என்ன உங்களுக்கு அவ்வளவு நெருக்கமா? என்று கேட்டு சண்டை போடுவார்கள்..! சிலர் உன்னுடைய பாஸ்வேர்டு கொடு என்று கேட்டு வாங்கிக்கொள்வார்கள்! இதற்கு பேர் தான் கெட்டிக்காரத்தனம்.
தொங்கு பாலமாகும் காதல்!
பேஸ் புக் அடிமைகளை காதலித்தால், அந்த காதலில் நம்பிக்கை, தைரியம் அதிகமாக இருக்காது என்று பல பெண்கள் கூறுகிறார்கள். எப்போது நம்மை விட்டு வேறொரு பெண்ணை தேடி செல்வாரோ என்ற அச்சம் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்யுமாம்!
தூக்கமின்மை!
இரவு எல்லாம் தூங்காமல், இந்த மனுசனுக்கு இன்னும் பேஸ் புக்குல என்ன தான் வேலை? நம்மள தூங்க சொல்லிட்டு யாரு கூட கடலை போடறான் என்பது போன்ற எண்ணங்கள் தோன்றுமாம். இந்த எண்ணங்கள் பெண்களுக்கு மன உலைச்சலையும், நிம்மதியின்மையும் தருமாம்!

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS